2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சீனியின்றி சுவைப்போம்

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ​​போஷாக்கு மாதம் இன்று ஆரம்பமாகும் நிலையில், “சீனியின்றி சுவைப்போம்” என்ற தொனிபொருளில் இம்மாதத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு ​​தொடர்பான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சிலி ஹெட்டியாராச்சி, தெரிவித்துள்ளார்.  

சுகாதார அமைச்சில் நேற்று(31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார்.  

இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், “மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகி அல்லது பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தில் அறிவுறுத்தலுக்கு அமைய சீனியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் சக்தியின் அளவு, உடற்சக்தியில் 05சதவீதத்தைவிட அதிகரிக்கக்கூடாது.  

“அதற்கமைய நாளொன்றுக்கு 06 மேசைக்கரண்டி அளவிலான சீனியையே உட்கொள்ள வேண்டும் எனினும், நகரத்தில் வாழும் சகல வயதுப் பிரிவினரும் சுகாதாரமற்ற பல்வேறு வகையான உணவுகள், சீனி பயன்படுத்தப்பட்ட மற்றும் சீனி அதிகளவில் சேர்க்கப்பட்ட பானங்களை அருந்துவதால் பாதிப்புக்கு முங்ககொடுத்துள்ளனர்” என்றார்.  

“ பாடசாலை மாணவர்கள் மற்றும் இளவயதினர் சீனி சேர்க்கப்பட்ட பானங்களை அதிகளவு பயன்படுத்தி வருக்கின்றனர். சீனி சேர்க்கப்படாத பானங்கள் என்று சந்தையில் விற்கப்படும் பானங்களில் 1.59 சதவீதம் சீனி காணப்படுகின்றது.  

“எனவே, சீனி சேர்க்கப்பட்ட பானங்களுக்கு பதிலாக சுத்தமான குடிநீர், சீனி சேர்க்கப்படாத இயற்கையான பழச்சாறு, சீனி சேர்க்கப்பாத பால் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துவதற்கான தேவை தற்போது காணப்படுகின்றது.” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .