2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சிறுபான்மை இனத்தவரை ஈழம்வாதிகளாக அடையாளப்படுத்த ஜனாதிபதி முயற்சி - ரவூப் ஹகீம் குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 24 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் கூட பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை இன மக்களை ஈழம்வாதிகளாக அடையாளம் காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம்   குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டியில்,பூஜாபிட்டிய என்னுமிடத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  ரவூப் ஹகீம்  உரையாற்றினார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தின் கீழ் முச்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

ஈழம்வாதிகள் இல்லாமல் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு  தனக்கு அதிகாரங்களைத்தருமாறு ஜனாதிபதி கோரி வருகின்றார். விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட பிறகும் கூட ஜனாதிபதி யாரை ஈழம்வாதிகள் என்று குறிப்பிடுகின்றார் என்றும் ரவூப் ஹகீம் இங்கு கேள்வி எழுப்பினார்.

ஈழம் குறித்த பயத்தை காட்டினால்தான்,சிங்கள மக்களுக்கு மத்தியில் இன உணர்வைத்தூண்டலாம் என்பதை ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார்.

அது மாத்திரமன்றி,விகிதாரசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்பது அரசாங்கத்துக்குத்தெரியும்.

இருந்தபோதிலும்,அரசாங்கம் மக்களை பயமுறுத்தி வருகின்றது என்றும் ரவூப் ஹகீம்  தெரிவித்தார்.  
 


  Comments - 0

  • xlntgson Thursday, 25 March 2010 10:16 PM

    ஜனாதிபதியை குறைகூற முடியாது உங்கள் பழைய நண்பர்களை குறை கூறுங்கள். எவ்வாறு நீங்கள் வென்றால் ஜனாதிபதியுடன் சகவாசம்(cohabitation) செய்ய போகின்றீர்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .