2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சாவகச்சேரி மாணவர் படுகொலை;தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கண்டனம்

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி மாணவரின் படுகொலைக்கு எதிராக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இப்படுகொலையை மேற்கொண்ட ஈபீடீபீ உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு,உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்ததின் முடிவுக்குப்பின்னரும் ராஜபக்ஸ அரசாங்கம் குடாநாட்டு மக்களை மரண பீதியில் வைத்துக்கொள்வதற்காக துணை  இராணுவக்குழுக்களை பயன்படுத்துகின்றது என்றும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .