2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சுவரொட்டிகள் அகற்றுவதில் சிரமம்-பொலிஸ்மா அதிபர்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னராக, வீதியோரங்களில் ஓட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் ஆகியவற்றை பொலிஸாரினால் முழுமையாக அகற்றிவிட முடியாது என பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 7000 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், இந்த வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவது மிகவும் கடினமானது எனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 20 வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளில் 20வீதமானவையே அகற்றமுடிந்ததாகவும் அவர் கூறினார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடந்த வாரம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .