2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஜனாதிபதியுடன் மாத்திரமல்ல,ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேச்சு நடத்த கூட்டமைப்பு தயார் - சுரேஷ்

Super User   / 2010 ஏப்ரல் 14 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஜனாதிபதியுடன் மாத்திரமல்லாது,ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாராகவுள்ளது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத்தயார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தமிழ்மிரர் இணையதளம் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியது.

தமிழ் மக்களுக்கு ஒரு 'கௌரவமான தீர்வு' கிடைப்பதற்கு வழி கிடைக்குமானால் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதில் எந்தவிதத்தடையும் இல்லை என்று அவர் பதிலளித்தார்.

யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • jeyarajah Thursday, 15 April 2010 01:31 PM

    ஜனாதிபதி அழைக்கமாட்டார்.அசட்டு கௌரவம்களை விட்டு காரியம்களை கவனிப்பது நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .