2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சி செய்ய அரசியலமைப்பு திருத்தம்?

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சி செய்யக்கூடியதாக  விரைவில் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சில வாரங்களில் கொண்டுவரப்படவுள்ள இந்த அரசியலமைப்புத்திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலஎல்லை நீடிக்கப்படவுள்ளது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
(SJ)


  Comments - 0

 • Munas-Doha Wednesday, 28 April 2010 08:28 PM

  மூன்று முறை போதுமா? வொய் நாட் ஐந்து முறை? ... அதோடு கூடி ஜனாதிபதியின் ஆட்சி காலத்தை பத்து வருசமாக்கினால் நல்லது. ஏனென்றால் ஒரு எலக்சனுக்கு செலவு (மக்களின் வரிப்பணம்) 2000 மில்லியன் ரூபாய். எதுக்குப்பா அடிக்கடி வீண் செலவு?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 28 April 2010 09:31 PM

  தேர்தல் தேவையில்லை ஆயுள் ஜனாதிபதியாக அவரே இருக்கட்டும் எதற்கு இந்த வன்முறை பிடித்த இன வெறியும் இனங்களுக்குள்ளே வெறியும் உட்கட்சி தகராறுகளும் பதவி சண்டைகளும் தேர்தல் ஆணையம் என்ன செய்து விட முடியும் தொகுதி வாரி முறையிலும் வன்முறை அதிகமாக இன வெறி அதிகமாக இருக்கும் என்பது திண்ணம். மக்கள் காசுக்கும் லஞ்சத்துக்கும் ஒட்டு போடத்தான் செய்கிறார்கள், பொய்யான தேர்தல் வேண்டாம். வெளிநாட்டு உதவி கிடைக்காவிட்டால் போகட்டும் உள்ளூர் தொழில்களும் விவசாயமும் போதும். கீரை கிழங்கு தின்று மனிதர்கள் இறந்து விடமாட்டார்கள்

  Reply : 0       0

  nuah Wednesday, 28 April 2010 09:40 PM

  ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போகிறோம் என்றார்கள், இப்போது மூன்று முறை என்கிறார்கள் அறுதிப் பெரும்பான்மை இருந்தால் என்ன தான் செய்யமுடியாது? எதிர்க்கட்சிகள் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு விவசாயம் வியாபாரம் எதுவும் இருந்தால் பார்க்கலாம். தேர்தல் ஆணையருக்கும் விடுமுறை கொடுத்துவிடலாம் சம்பளத்தோடு. இலங்கை ஜனநாயகத்தை வேறு நாடுகளும் பின்பற்றலாம் செலவு இல்லை, தேர்தலுக்காகும். .

  Reply : 0       0

  nuah Thursday, 29 April 2010 09:02 PM

  ஜனாதிபதியை ஆயுள் ஜனாதிபதியாக்குவது நல்லது. அல்லது இயலுமானால் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிட்டு வென்று கொள்ளலாம் என்று இந்தியாவில் இருப்பது போல் விட்டு விடலாம்- இந்தியாவில் இதுவரை யாரும் அம்மாதிரியாக பல முறை பதவியில் இருந்தது இல்லை- இரண்டு முறை இருந்ததும் கூட ஒருவரே. பொதுவாக உண்மையில் மக்கள் குரல் எதிரொலிக்க இடமிருக்குமே ஆனால் ஒருவருக்கும் மீண்டும் மீண்டும் வர இயலாது, சட்டத்தை மாற்றிக்கொண்டே இருந்தாலொழிய.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .