2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜனநாயக தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக டிரான் அலஸ்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக அநுர குமார திஸாநாயக்கா,டிரான் அலஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான அநுர குமார திஸாநாயக்கா இதனை உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மங்கள சமரவீர தலைமையிலான மக்கள் பிரிவின் செயலாளரான டிரான் அலஸ் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டிருந்தார்.

கடந்த காலங்களில் டிரான் அலஸ் பல அரசியல் ரீதியிலான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கவேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .