2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் உடல்நிலை மோசம் - ஜேவீபீ

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டு வருவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் ஊடகப்பேச்சாளர் அநுர குமார திஸாநாயக்கா தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகா மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பெரியாஸ்பத்திரியின் வைத்திய நிபுனர் ஒருவர் ஒருவர் சென்று பார்வையிட்டார் என அரசாங்கம் கூறுகின்றது.

எனினும் அந்த வைத்தியர் யார் என்பதோ அவருடைய பெயர் என்ன என்பதோ எமக்குத்தெரியாது என்றும் அநுர குமார திஸாநாயக்கா தமிழ்மிரர் இணையதளத்திடம்  மேலும் கூறினார்.

ஜெனரல் பொன்சேகா,வெளியிலிருந்து விசேடமாக மருத்துவர்களால் கவனிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .