2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகா மீதான 2ஆவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு எதிராக ஜே.வி.பி வழக்கு தாக்கல்

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இரண்டாவது இராணுவ  நீதிமன்ற விசாரணைக்கு எதிராக ஜனநாயக தேசிய முன்னணி வழக்குத் தாக்கலொன்றை செய்யவுள்ளது.

இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவுள்ளது எனக் கூறி ஜனநாயக தேசிய முன்னணி வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாக இன்றைய ஊடகவியலாளர்கள்  மாநாட்டில் ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்காக மூன்று புதிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை மீண்டும் இடம்பெறவிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ  நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .