2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கப்படலாம்-லக்ஸ்மன் ஹுலுகல்ல

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தண்டனை வழங்கப்படலாம் என தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கப்படக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கு இல்லை என்பதுடன்,  தண்டனை வழங்குவது குறித்த தீர்மானங்களை நீதவான்களே எடுக்க வேண்டும் எனவும்  டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் முகமாக அரசாங்கம் விரைவில் இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்தவிருப்பதாக ஜனநாயக தேசிய முன்ணனி குற்றஞ்சாட்டியிருந்தது. அரசியல் ரீதியில் தோல்வியடைந்த கட்சி இவ்வாறான விமர்சனங்களை வெளியிடுவதில் ஆச்சரியமில்லை எனவும் லக்ஸ்மன் குலுகல்ல குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .