2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை பேசவிடாமல் பிரதி அமைச்சர் மர்வின் சில்வா குழப்பம்

Super User   / 2010 மே 04 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி க்கொண்டிருந்தபொழுது பிரதி ஊடக அமைச்சர் மர்வின் சில்வா பலவித இடையூறுகளை மேற்கொண்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன. 

எனினும்,ஜெனரல் பொன்சேகா மர்வின் சில்வாவின் குறுக்கீடுகளை பொருட்படுத்தாது தன்னுடைய உரையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

ஊடகப்பிரதி அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி விஜேசேகர தொடர்ந்தும் எதிர்க்குரல் எழுப்பி வந்தார்.

இருந்த போதிலும்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு ஜெனரல் பொன்சேகாவின் உரையை ஒழுங்காக கேட்க முடியவில்லை என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.


  Comments - 0

  • KONESWARANSARO Wednesday, 05 May 2010 03:37 PM

    பிரதி ஊடக அமைச்சர் தனது பணியை சரியான இடத்தில் தொடங்கியுள்ளார் . கருத்துச் சுதந்திரம் வாழ்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .