2021 ஜூன் 16, புதன்கிழமை

டக்ளஸ் தேவானந்தா வெற்றிலை சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டி;இன்று வேட்புமனு தாக்கல்

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சற்று முன்னர் தமிழ் மிரர் இணைய தளத்துக்கு தெரிவித்தார்.

இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது,யாழ்ப்பாணத்திலிருந்து எம்முடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தாம் யாழ். செயலகத்தை நோக்கி தற்போது சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

ஈ.பீ.டீ.பீ கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  சார்பில் ஒருவரும்,ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச்சின்னத்தில்  போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில்மாத்திரம் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .