எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 மே 25 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தாக்கியதுடன், அவதூறான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகக் கூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பாதுகாப்புக் கடமைக்காக புதன்கிழமை (24) இரவு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் இடையில் ஏற்பட்ட உரையாடல், வாக்குவாதமாகி கைகலப்பாக மாறியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் போதையில் வந்து தன்னைத் தாக்கியதுடன், அவதூறான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தனது முறைப்பாட்டில் தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தேரர் புதன்கிழமை இரவு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.
இருப்பினும், மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தாக்கியதாகவும் அதன் பின்னரே, தேரரை மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago