2021 ஜூன் 17, வியாழக்கிழமை

தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றத்தில், குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த பெப்ரவரி மாதம்  17ஆம் திகதியளவில் தனுன திலகரட்னவிற்கு அசோக திலகரட்னவின் தாயார் தங்குமிட வசதியளித்திருந்தார்.

இதனையடுத்து, தனுன திலகரட்னவிற்கு தங்குமிட வசதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,  தனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் கைதுசெய்யப்பட்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, தனுன திலகரட்ன எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக  குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டது. தெகிவளை, நுகேகொட,  நுவரெலியா உட்பட ஏழு இடங்களில் தனுன திலகரட்ன தலைமறைவாகியிருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .