2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தனுன திலகரட்னவின் தாயாரின் தாயார் பிணையில் விடுதலை

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயாரின் தாயாரை 3000 ரூபா பணப் பிணையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

கடந்த மாதம் தனுன திலகரட்னவிற்கு தங்குமிட வசதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தனுன திலகரட்னவின் தயாரின் தயார் நேற்று இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதியளவில் தனுன திலகரட்னவிற்கு அசோக திலகரட்னவின் தாயார் தங்குமிட வசதியளித்திருந்தார்.

இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த அவர், 3000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு  கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி கொழும்பு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .