2021 ஜூன் 19, சனிக்கிழமை

தனி நாடு அமைக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தில் புதிய இராணுவம்

Super User   / 2010 மே 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனி நாடொன்றை அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவொன்று உருவாக்கப்படுவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் நாடாளுமன்றத்தில் இன்று காலை டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முதலாவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.

இதனை முன்னிட்டு சுவிஸ்சர்லாந்தில் நாடு கடந்த  தமிழீழ அரசாங்கமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் மேலும் அவர்  கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .