2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரெமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .