2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு நாளை

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு நாளை புதன்கிழமை மலரவிருக்கிறது.

இந்து முறைப்படி, விரோதி வருடம் பங்குனி மாதம் 30ஆம் திகதி (14.04.2010) புதன்கிழமை வைகறை நாடி 58 விநாடி 07 (05.21 மணிக்கு) அபரபக்க அமாவாசைத் திதியில், ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் வைதிருதி நாம யோகத்தில், சதுர்பாத கரணத்தில், மீன லக்கினத்தில், தனு நாவாம்சத்தில் இந்தப் புதிய விகிர்தி வருடம் பிறக்கிறது.

அன்று 1.21 மணி முதல் விகிர்தி சித்திரை முதலாம் திகதி புதன்கிழமை காலை 9.21 மணி வரை புண்ணிய காலமாகும்.

இந்த புண்ணிய காலத்தில் அனைவரும் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, பொன்னிற பட்டாடை அல்லது சிவப்புக்கரை அமைந்த பட்டாடை அணியலாம்.

இதன் பின்னர், கோவில்களுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .