2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அங்கீகாரம்-மாவை சேனாதிராசா

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்  மக்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொள்கைகளை அங்கீகரித்துள்ளனர் என கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்துக்கு இன்று தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன.தாம் எதிர்பார்த்தளவு ஆசனங்கள் கிடைக்காத போதிலும் தமக்கு இது பெரும் வெற்றி என்றும் மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கு மாகானங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு இலங்கையின் அரசியலில் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .