2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பதவிக்கு முஸ்லிம் பிரதிநிதி இமாம் நியமிக்கப்படுவாரா ?

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன் 

EXCLUSIVE தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் இமாமுக்கு இம்முறை தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  வடபகுதி முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டத்தரணி இமாம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடந்த முடிந்த நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்னர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சட்டத்தரணி இமாமுக்கு வழங்கப்படும் என செய்திகள் வெளிடப்பட்டிருந்தன.

தமிழ்மிரர் இணையதளம் கூட செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும்,தற்போது சட்டத்தரணி சுமந்திரன் என்பவரின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பிரேரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .