2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  

காலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக்கொள்பவர்களே, புத்தரின் போதனைகளை பின்பற்றியவர்களாவர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .