2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தாயின் பாசத்துக்காக ஏங்கிய மாணவி சடலமாக மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 மே 25 , பி.ப. 05:54 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தாயின் பாசத்துக்காக ஏங்கித் தவித்த மாணவியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று, மன்னாரில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், உயர் தரத்தில் கல்விகற்று வந்த சண்முகலிங்கம் மிதுலா என்ற மேற்படி மாணவியின் சடலம், வங்காலை ரயில் தண்டவாளத்துக்கருகில் இருந்து, பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலத்துக்கருகில் இருந்து, மூன்று பக்கங்களிலான கடிதமொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது,

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த மேற்படி மாணவி, மன்னாரில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த நிலையிலேயே, தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, முழங்காவிலில் இருந்து மன்னாருக்குச் சென்றவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் சடலத்துக்கருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தானது தாயின் அரவணைப்பை இழந்துத் தவிப்பதாகவும் தாய் தன்னை தனியாகத் தவிக்கவிட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை, பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் ​ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 1

  • Jeyi Thursday, 25 May 2017 01:25 PM

    All, Really saddened by so many senseless suicides in my homeland. Our life is a gift from God (doesn't matter which religion you believe in it) and priceless. Please don't lose it for any reason. Try to be positive with the negative incidents, challenge yourself, live happily and peacefully. Thank You Jeyi

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .