2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரசாங்க ஊழியர்கள்;ஐ.தே.க குற்றச்சாட்டு

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா துறைமுக அதிகாரசபை,  மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றில் கடமையாற்றும் ஒரு சில அரசாங்க ஊழியர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயாக்கா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் தமது கட்சிக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த ஊழியர்கள் தினமும் தினவரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டுவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அலுவலகத்திலிருந்து செல்வதாகவும் திஸ்ஸ அத்தநாயக்கா குறிப்பிட்டார்.

நாட்டில் இன்று சட்டம் இல்லை எனக் கூறிய திஸ்ஸ அத்தநாயக்கா , போதைவஸ்து கடத்துபவர்களைக் கூட பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் இலங்கைப் பொலிஸார் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .