2021 ஜூன் 24, வியாழக்கிழமை

தேர்தல் வன்முறைகளை விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுத்தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உப தலைவரும்,சர்வதேச விவகாரம்,பாதுகாப்புக்கொள்கை ஆகியவற்றுக்கான ஒன்றியத்தின் உயர் அதிகாரியுமான கத்ரீன் எஷ்ட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய அரசாங்கத்துடன் தாம் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்றதாக வரவேற்புத்தெரிவித்துள்ள  கத்ரீன் பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்ற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அரசாங்கம் ஒழுங்கான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும்  அவர் வேண்டுகோள் விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .