2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தலைப்பிறையைக் கண்டால் அறிவிக்கவும்

Editorial   / 2017 மே 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. 

இதற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.22 மணி முதல், புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 5234044, 011 2432110, 077 7316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2390783 என்ற  தொலை நகல் ஊடாகவோ  அறியத்தருமாறும், சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .