2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாடாளுமன்ற தெரிவு காரணமாக கிழக்கு மாகாண சபைக்கு பல புதுமுகங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் பலர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, எம்.எஸ்.எம்.தெளபீக் மற்றும் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் வெற்றிடத்திற்காக ஓட்டமாவடி புர்க்கான், கிண்ணியா லாபீர் மற்றும் புல்மோட்டை அன்வர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர். எனினும், முன்னாள்  மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்காக இதுவரை யாரும் தெரிவுசெய்யப்படவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

  • xlntgson Monday, 12 April 2010 10:16 PM

    முதலில் பொதுத் தேர்தலை நடத்தி தோற்றவர்கள் மாகாண சபைகளுக்கு போட்டியிடும் முறைமை வேண்டும் இல்லாவிட்டால் மாகாண சபை முறை கேலி கூத்தாக்கப் படுவது தொடரும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .