2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாடு கடந்த அரசை அமைப்பதற்கான தேர்தல் சட்டவிரோதமானது-அரசாங்கம்

Super User   / 2010 மே 03 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக கனடாவில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் சட்டவிரோதமானது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினரை தொடர்ந்து நடமாடவைப்பதற்கு முயற்சிப்பதாகவும் ஓட்டோவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வர குறிப்பிட்டார்.

கனடாவில் நாடுகடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான வாக்களிப்பில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்  ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் தற்போது யுத்தம் மற்றும் கொலைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் சித்திராங்கனி வாகீஸ்வர தெரிவித்தார். இலங்கையில் தற்போது சமாதானம் நிலவிவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .