2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நித்தியானந்தா சரியா தவறா?

Super User   / 2010 மார்ச் 03 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தனியார் டி.வி. சேனலில் சுவாமி நித்யானந்தர் தொடர்பான பாலியல் படக்காட்சிகள் ஒளிபரப்பானதை அடுத்து திருவண்ணாமலை நித்யானந்தர் ஆசிரமம் முன் இந்து மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்டனர் என்று இந்திய இணைய தள செய்திகள் கூறின. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் பிறந்தவரான சுவாமி நித்யானந்தர் தனது சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்.
அவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். திருவண்ணாமலையிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் அவருக்கு ஆசிரமங்கள் உள்ளன.திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவரது பேனரையும் சிலர் கிழிக்க முயன்றனர். இதையடுத்து சிவபாபு உள்ளிட்டவர்களை போலீஸôர் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வீடியோ காட்சிகள் எவ்வாறு பெறப்பட்டது என்பது பற்றியும் தெரியவில்லை. அதேவேளை குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கும் சுவாமி நித்தியானந்தவிற்கும் இடையில் நல்லுறவு இருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
அதேவேளை, இந்த பிரச்சனை தனிநபர் சுதந்திரம், மற்றும் மீடியா தர்மம் பற்றிய பெரும் சர்ச்சையையும் கிளப்பி விட்டிருக்கிறது. யு டியூபில் பலரும் இந்த காட்சிகளை பிரசுரித்து உள்ளனர்.
தீவிர பத்திரிக்கையான நக்கீரன் தளம்மறைக்கப்படாத வீடியோவை யு டியூபில் (YouTube.com)பிரசுரித்துள்ளமை சற்று அதீதமானது என்று பலர் கருத்து தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .