2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் ஆட்கொணர்வு- இராணுவ நீதிமன்ற மனுக்கள் இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணை

Super User   / 2010 மார்ச் 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையை மே மாதம் 3ஆம் திகதிக்கு பிற்போட்ட நீதிமன்றம், சரத் பொன்சேகாவின் இராணுவ நீதிமன்றத்திற்கு எதிரான மனு தொடர்பான அதன் உத்தரவில் தற்போது நிலவும் நிலைமையை பேணுமாறு பிரதிவாதிகளுக்கு பணிப்புரை விடுத்தது.

ஜெனரல் பொன்சேகாவின் ஆட்கொணர்வு மனு மற்றும் இராணுவ நீதிமன்றத்திற்கு எதிரான மனு ஆகியனவற்றை விசாரணைக்கு தொடர்ந்தும் எடுத்துக்கொள்ளலாமா என்பது பற்றிய அதன் தீர்ப்பை மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல்கள் எச்.எல்.வீரதுங்க, ஏ.ஆர்.எல்.விஜேதுங்க, டி.ஆர்.ஏ.பி.ஜயதிலக மற்றும் ரியர் அட்மிரல் (பிரதி சொலிசிட்டர் ஜெனரல்) டபிள்யூ.ஜே.எஸ்.பெர்னான்டோ ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டது.

இராணுவ நீதிமன்ற மனுத் தொடர்பான பணிப்புரை பற்றி சட்டமா அதிபர் டெய்லிமிரர் இணையதளத்திற்கு விளக்கமளிக்கையில், இந்த பணிப்புரை இராணுவ நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இடமளிக்கும் என்றும், ஜெனரல் பொன்சேகாவை இராணுவப் பாதுகாப்பில் தொடர்ந்து வைத்துக்கொள்ளமுடியும் என்றும் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றோமேஷ் டி.சில்வா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பணிப்புரையின்படி இராணுவ நீதிமன்ற விசாரணையை அவர்கள் தொடரமுடியாது என்றும், இராணுவ நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டால், தான் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .