2021 ஜூன் 16, புதன்கிழமை

நிருபமா ராவ் வடபகுதி விஜயம் உறுதியில்லை - போகொல்லாகம

Super User   / 2010 மார்ச் 07 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்முர்ஷிதீன்

இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் இன்று நன்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் என வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தற்போது பேராதனை ஆங்கில கல்வியியற்கல்லூரி வைபவமொன்றில் கலந்துகொண் டிருக்கும் நிரூபமா ராவ் ஜனாதிபதியுடன் பகற்போசன விருந்திலும் கலந்துகொள்வார் என அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இந்திய வெளிவிவகாரச்செயலாளர் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்வாரா என தமிழ்மிரர் இணையதளம் வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகமவிடம் வினவியது.

அதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும் , அவர் இரண்டுநாள் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

நாளை நிரூபமா ராவ் வெளிநாட்டமைச்சர் போகொல்லாகமவுடன் காலைப்போசன விருந்தில் கலந்துகொள்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .