2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

நீர் விநியோகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்

Freelancer   / 2024 மார்ச் 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச செயற்றிறனுடன் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி குறிப்பிட்டார். 

நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளமையினால் நாளாந்தம் 2000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர் கூறினார். 

நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் குறித்து 1939 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியுமென அவர் தெரிவித்துள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .