2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நளினியை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்வதற்கு தமிழ் நாட்டு அரசாங்கம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.

நளினி முருகனை முன்கூட்டி விடுதலை செய்யமுடியாது என சிறை ஆலோசனைக் குழு தெரிவித்ததையடுத்து, தமிழ் நாட்டு அரசாங்கம இதனை மறுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி முருகன் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார்.

14 ஆண்டுகள் சிறையிலிருந்த தனக்கு, ஆயுள் தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுதலையாவதற்கான தகுதி உள்ளது எனக் கூறி சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கலொன்றைச் செய்திருந்தார்.

நளினி முருகனின்  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப நளினியை விடுதலை செய்ய முடியாது என தமிழ் நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டது.

  Comments - 0

  • xlntgson Monday, 29 March 2010 09:28 PM

    கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .