2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நளினியை விடுவிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பொது மன்னிப்பு முறையின் கீழ் தண்டனைக் காலத்திற்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...
நீதிபதிகள் எலிப் தர்மராஜ், கே.கே. சசிதரன் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

""முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மிகத் தந்திரமாக திட்டமிட்டு அவரது உயிரைப் பறித்துள்ளனர். நளினியை மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல சமமாக கருத முடியாது. எனவே, தண்டனைக் காலத்திற்கு முன்பாக விடுதலை செய்வதை அவர் உரிமையாக கோர முடியாது. '' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நளினியின் கோரிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு பரிந்துரைப்படி அவரை  விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனிடையே  அவரை பொது மன்னிப்பு முறையின் கீழ் விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .