2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நாளை மறுதினம் 16ஆவது சார்க் மாநாடு பூட்டானில் ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய நாடுகளுக்கான 16ஆவது சார்க் மாநாடு இம்முறை பூட்டானில் நடைபெறவுள்ளது.

பூட்டான் தலைநகரான திம்புவில் இடம்பெறும் சார்க் மாநாடு எதிர்வரும்
28ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 16ஆவது சார்க் மாநாட்டின்  தொனிப்பொருள் "காலநிலை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு" ஆகும்.

இந்த சார்க் மாநாட்டில் அவதானிகளாக சீனா, ஜப்பான், தென்கொரியா, ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

15வது சார்க் மாநாடு 2008ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றிருந்தது. இதன் தொனிப்பொருள் "எமது மக்களுக்கான நட்புறவு" ஆகும்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய ஏழு தெற்காசிய நாடுகள் சார்க் மாநாட்டில் அங்கம் வகித்துவருகின்றன. இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற சார்க் மாநாட்டின்போது ஆப்கானிஸ்தானும் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .