2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மீண்டும் நாளை கூட்டப்படவுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு சாசனத்தின்படி, நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் வேளையில் நாடாளுமன்றத்தை கூட்டும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி பிரயோகிப்பார்.  இல்லாவிடின்,  புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கூட்டப்படும்.

அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளை பயன்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியும் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .