2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நுவரெலியாவில் ஐ.தே.க வேட்பாளர்களின் ஆதரவாளர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்;சதாசிவம் குற்றச்சாட்ட

Super User   / 2010 மார்ச் 29 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையிலான கும்பல்  தன்னுடைய ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் எஸ்.சதாசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்,

இன்று மாலை இடம்பெற்ற இத்தாக்குதல் காரணமாக தம்முடைய ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் எஸ்.சதாசிவம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். 

கொத்மலை தேர்தல் தொகுதியிலுள்ள ரம்பொடை பகுதியிலுள்ள ப்ரொடொப் எஸ்டேட்,எல்பொடவில் பிரசாரக்கூட்டமொன்று சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

5.30 மணியளவில் கூட்டம் முடிந்து இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம்,தொழிலாளர் தேசிய் சங்கத்தின் தலைவர் திகாம்பரம்,உபதலைவர் உதயகுமார் ஆகியோர் தமது ஆதரவாளர் சகிதம் அந்த வழியாக சென்றுள்ளனர்..

இச்சந்தர்ப்பத்திலேயே ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான்,தனது கும்பலுடன் வந்து கற்களாலும்,ஆயுதங்களாலும் தாக்குதல்கள் நடத்தியதாக சதாசிவம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

இத்தாக்குதல் குறித்து பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்லதாகவும் எஸ்.சதாசிவம் மேலும் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .