2021 ஜூன் 19, சனிக்கிழமை

நாவலப்பிட்டி வேட்பாளர்கள் - தேர்தல் கண்காணிப்பாளர் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் மீள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நேற்றிரவு சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி வேட்பாளர்களான எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில வேட்பாளர்களையும் சந்தித்திருந்ததாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன கெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, சுமுகமான நிலைமையை பேணுமாறும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அனுமதிக்குமாறும் அவர்களிடம் கோரியதாகவும் ரோஹன கெட்டியாராய்ச்சி குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .