2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பங்களாதேஷ் இராணுவ தூதுக்குழு இன்று யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு விஜயம்

Super User   / 2010 மார்ச் 24 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

 EXCLUSIVE இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பங்களாதேஷின் உயர் மட்ட இராணுவ தூதுக்குழு இன்று யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மெஹபூபுஸ்ஸமான் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இன்று தெரிவித்தார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கும்,யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிடுவதற்கும் 12 பேர்கொண்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மேலும் கூறினார்.

நாளை 26ஆம் திகதி பங்களாதேஷ் தேசிய தினமாகும்.

இதனை முன்னிட்டு கொழும்பில் இடம்பெறவுள்ள வைபவத்திலும் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக உயர் ஸ்தானிகர் மெஹபூபுஸ்ஸமான் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் இராணுவத்தூதுக்குழுவினர் திங்கட்கிழமை நன்பகல் இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இராணுவத்தலைமையக நடவடிக்கை பணிப்பாளரும்,விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை களத்தில் வழி நடத்தியவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடனும் கலந்துரையாடினர்.

இலங்கை இராணுவத்திற்கு பங்கலாதேஷில் பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இருதரப்பிலும் ஆராயப்பட்டது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .