2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.நகரில் பிச்சைத்தொழிலில் ஈடுபட்ட சிறுவர் உட்பட 19 பேர் விடுவிப்பு

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் பொலிஸாரினால்   கைதுசெய்யப்பட்ட சாஸ்திரம் பார்ப்பவர்கள், பிச்சைக்காரர்கள் 19 பேர்  நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஆறு சிறுவர்கள் அடங்குவதாகவும், இவர்களை நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன்,  முதியவர் ஒருவர் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு நீதிமன்றம் கூறியதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஏனையோரை நீதிமன்றம் எச்சரித்து விடுதலை செய்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .