2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பூட்டானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ - அமெ. பிரதிநிதி ரொபர்ட் ஓ பிளேக் சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பூட்டானில் இன்று இடம்பெறும் 16ஆவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரொபர்ட் ஓ பிளேக்கும் இடையில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஆகியன தொடர்பில் இவர்கள் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .