2021 ஜூன் 17, வியாழக்கிழமை

புதிய அமைச்சர்-பிரதி அமைச்சர் இன்று காலை பதவிப் பிரமாணம்

Super User   / 2010 மே 05 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஐந்து பேர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் கெஹலிய ரம்புக்வெல, புதிய ஊடகத்துறை அமைச்சராகவும், ஆறுமுகம் தொண்டமான் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராகவும், எஸ்.பி.திஸாநாயக்கா உயர் கல்வி அமைச்சராகவும், திஸ்ஸ விதாரண தொழில்நுட்பம் மற்றும் மீளாய்வு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை, சரத் அமுனுகம நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடன், மர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராகவும், மஹிந்தானந்த அலுத்கமகே இளைஞர் விவகார பிரதி அமைச்சராகவும், பைஸர் முஸ்தபா சுகாதாரத்துறை பிரதி அமைச்சராகவும், எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன பௌத்த சாசனம் மற்றும் மத விவகாரங்கள் பிரதி அமைச்சராகவும் பேராசிரியர் ஜகத் பாலசூரிய தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் பிரதி அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.  

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .