2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

புதிய அமைச்சரவை நியமனத்தில் ஆறுமுகன் தொண்டமான் அதிருப்தி

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்படாமையினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியைப்  பெறவில்லையெனெ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.  

மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியொன்றை ஆறுமுகம் தொண்டமானுக்கு மிக விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ உறுதியளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கத்திற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமன வைபவத்தில் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.(R.A)  Comments - 0

 • Chandrabose Saturday, 24 April 2010 02:39 AM

  ஜனதிபதி அவர்களின் பெருந்தோட்ட விடமைப்பு திட்டத்திற்கு உதவும் வகையல் தொண்டமானுக்கு பொருத்தமன அமைச்சு கொடுப்பதன் முலம் வீடு இல்லாத தொழிளார்களுக்கு அதனை அடைய வழிகிடைக்கும் என்று எதிர்பார்கின்றோம்

  Reply : 0       0

  xlntgson Saturday, 24 April 2010 08:40 PM

  ஏன் தேசிய பட்டியலில் நாங்கள் சொன்னவாறு போடவில்லை என்றுதான் தெளிவாகக் கேளுங்களேன்! கிடைத்ததை பெற்றுக்கொள்வது பதவியை மற்றவர்களுக்கு அளித்து விட்டு ஒதுங்கி இருப்பது எல்லாம் செய்து பழக்கம் தானே தலைவருக்கு .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .