Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 05 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சுனாமி பேரழிவின்போது வெளிநாட்டு உதவிகளில் ஆதாயங்களைத் தேடிய
அமைச்சர்களைப் போன்று, இன்றைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் எவரும் இல்லை” என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
சுனாமி ஏற்பட்ட காலத்தில் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர், அதில் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு உதவிகளை தமதாக்கிக் கொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைத்திய சிகிச்சை ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காகவே வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். நாட்டின் முக்கியமான பிரமுகர்களின் ஒருவரான, அவர் தனது உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும்.
அதனால் அவர் தனது சிகிச்சையை விரைவாக முடிந்துக்கொண்டு, நாடு திரும்புவார்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜப்பான் வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து அழைப்பு வந்ததாகக் கூறி ஜப்பான் சென்றுள்ளார். அதில் எந்தவோர் உண்மையும் இல்லை. அவர் தனது சொந்த தேவைகளுக்காகவே ஜப்பான் சென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாது, வௌ்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரையும் எந்த உதவியையும் மஹிந்தவின் கட்சி வழங்கவில்லை.
ஆனால், சுனாமியின்போது மக்களுக்கு 24 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுத்தோம் என்கின்றனர். சுனாமியின்போது, நீரானது மீண்டும் கடலுக்கே சென்றுவிட்டது. ஆனால், அவ்வாறான நிலைமை இன்றில்லை. ஆகையால், யோசித்துப் பேச வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டார்.
24 minute ago
13 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
13 Oct 2025