2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமான ஊழியர் மூன்று நாள் வேலை நிறுத்தம்

Super User   / 2010 மார்ச் 21 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஊழியர்கள் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான உழியர்களின் சம்பளம், சலுகைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கடந்த சில தினங்களாக யுனைட் யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் நடந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததாலேயே இந்த வேலை நிறுத்தத்தை  மேற்கொண்டுள்ளதாக விமான ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

வெள்ளிக் கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதுவரை 1100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் விடுமுறைக்காக பல நாட்டு மக்கள் பயணத்துக்குக் காத்திருக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தம் பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பட்டியலிட்டிருந்த விமானங்கள் எண்ணிக்கு 1950. இவற்றில் 1100 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சேவை முடங்கிவிட்டது.

கடந்த டிசம்பரில் கிறிஸ்மஸ் சீஸனில் இதே போல 12 நாள்கள் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததும் அதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பல பில்லியன் டாலர்களை இழந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .