2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பிரதானியின் சூத்திரம் புரியவில்லை; பசிலுக்கான அதிகாரம்தான் என்ன?’

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தக் கொரோனாவுக்கு மத்தியில் பொருள்களின் விலை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது.

98 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் தருவதாக வர்த்தமானி மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட அரிசி, சந்தையில் எங்குமே இல்லை எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் முன்னாள் மேஜர் ஜெனரல் திசாநாயக்கவை இந்த நாள்களில் தேடிக்கொள்ள முடியாமல் உள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில , டொலர் பிரச்சினையே எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்கிறார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தவே எரிபொருள் விலையை அதிகரித்ததாக நாட்டின் தலைவர் கூறுகிறார்” எனத் தெரிவித்த விஜித ஹேரத், “உங்களது பொருளாதாரம் தொடர்பான அறிவுக்கமைய, எரிபொருள் விலையைக் கூட்டினால் எவ்வாறு உற்பத்தி செலவு கட்டுப்படுத்தப்படும்; எவ்வாறு தேசிய பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.

எனவே, நாட்டின் பிரதானியுடைய இந்தச் சூத்திரம் என்னவென்று மக்களுக்கு கொஞ்சம் புரிய வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். எரிபொருள் விலை ஏற்றம், சகல பொருள்கள் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும் என்பதை தெரியாதவர் நாட்டை ஆட்சி செய்தால், அரசாங்கத்தின் ஏனைய தீர்மானகள் குறித்து எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பசில் இருந்தால் இவ்வாறு நடக்காது என வேறு சில கூறுகின்றனர். யார் இந்த
பசில்? அமைச்சரவை அமைச்சரா? அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட
உயர்ந்த பதவியில் இருப்பவரா? என்றும் கேட்டார்.

பசிலுக்கு ஏதாவது வித்தியாசமான சக்தியுள்ளதா? அவர் எண்ணெயை உற்பத்தி செய்கிறாரா? அது என்ன பசிலிடம் உள்ள மெஜிக் அதிகாரம்? குறைந்தது அமைச்சராகவோ, உறுப்பினராகவோ அவரை நியமிக்க, அவருக்கு இந்த நாட்டு பிரஜாவுரிமை கூட இருந்ததா? அமெரிக்கா பிரஜையான பசிலுக்கு உள்ள புதுமையான அதிகாரம் என்ன? என வினவினார்.

“எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இருந்து எவ்விதப் பலனுமில்லை. எங்கேயோ உள்ள அமெரிக்க பிரஜையான பசில் தான் இலங்கையின் எரிபொருள் விலையைத் தீர்மானிக்கின்றார்.

“இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது. பசிலுக்கும் தேவை இதுவே. சாகர காரிவசத்தைப் பயன்படுத்தி, கம்மன்பிலவுக்கு எதிராக அறிக்கை விட்ட அவர், இப்போது ஐக்கிய மக்கள் சக்தியைப் பயன்படுத்தி கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிக்கிறார்” எனத் தெரிவித்த அவர், “இந்த விடயம் தொடர்பில், சகல
விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தே கட்சி என்ற ரீதியில் நாம் தீர்மானம்
எடுப்போம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .