2021 மே 15, சனிக்கிழமை

‘பிரதியமைச்சர் பிழை செய்யவில்லை’

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“காலநிலை ​தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொள்ள நான் வெளிநாட்டுப் பயணம் சென்றுவிட்டேன், நான் நாட்டில் இல்லாத போதும், அனர்த்தக் காலத்தில் பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த, சிறப்பாகவே செயற்பட்டார்” என, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த சில நாட்களாக நாட்டில் நான் இருக்கவில்லை. இந்த மாநாடு 4ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையையடுத்து, அந்த மாநாட்டை கைவிட்டு நான், நாடு திரும்பிவிட்டேன். 

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையை, அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த சிறப்பான முறையிலேயே கையாண்டார். அலைபேசி ஊடாக நாங்கள் தொடர்பு கொண்டு கலந்துரையாடினோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .