2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் ?

Super User   / 2010 ஏப்ரல் 26 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்.

இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸாவை நிராகரிக்கும் சூழ்நிலையில் தான் மலேஷியா சென்று,அவரை கொழும்புக்கு அழைத்து வந்து,அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார்.

  Comments - 0

  • xlntgson Tuesday, 27 April 2010 09:42 PM

    சிவாஜிலிங்கத்தின் அரசியலினால் இந்த படுத்த படுக்கையிலும் அவருக்கு போராடவேண்டியதாகிவிட்டது. இந்தியாவுக்கு தலையடி கொடுக்க வேண்டும் என்பதை தவிர இந்திய மண்ணுக்கு இவர்கள் செநநீர்தான் சேர்ப்பார்கள், நன்றி பாராட்ட மறந்து விடுவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .