2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிரபாகரனின் தாயார் மலேஷியா வந்து சேர்ந்தார் ; கனடாவில் குடியமர்வார் -சிவாஜிலிங்கம்

Super User   / 2010 மார்ச் 12 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வீ.பிரபாகரனின் தாயாரான பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை தற்போது மலேஷியா வந்து சேர்ந்துள்ளார்.

இத்தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் உறுதிப்படுத்தினார்.

மலேஷியாவிலிருந்து பிரபாகரனின் தாயார் கனடாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் தன்னுடைய தாயாரை அழைத்துச்செல்வதற்காக மலேஷியா வந்துள்ளார் என்றும் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அண்மையில் பிரபாகரனின் தாயாரை தூரத்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக சிவாஜிலிங்கம் சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேஷியாவிலிருந்து பிரபாகரனின் தாயார் எப்போது கனடா செல்வார் என தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

பொதுவான நடைமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,அங்கு போய் குடியமர்வதற்கு சுமார் இரண்டு மாத காலம் செல்லும் என்று தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் தலைவர் கே.சிவாஜிலிங்கம் பதிலளித்தார்.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .