2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘பாறைகள் உருளும் உஷார்’

Editorial   / 2017 மே 31 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மண்சரிவு, கற்கள் சரிந்து விழுதல், பாறைகள் விழுகை, நிலம் தாழிறக்கம், நிலவெட்டுச் சாய்வுகளிலிருந்து பாறைகள் விழுதல், ஆகியவை தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பை தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நீடித்துள்ளது.  

அந்த எச்சரிக்கையை இன்னும் 24 மணிநேரத்துக்கு நீடித்துள்ள அந்நிறுவகம், எச்சரிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.  

பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மாவட்டங்கள் உட்பட கேகாலை, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் மண் சரிவு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஆகியன எச்சரிக்கை விடுத்துள்ளன. 

மீரிகம, திவுலப்பிட்டிய, கம்பஹா, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், ஏற்கெனவே அடையாளங்காணப்பட்ட இடங்களிலும் மேற்படி மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கின்ற அடைமழை காரணமாக, அந்த மாவட்டத்தில் மீண்டும் வௌ்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஆகக் கூடிய மழை வீழ்ச்சியான 106.06 மில்லிமீற்றர், நோட்டனில் பதிவாகியுள்ளதுடன், 47.04 மில்லிமீற்றர் யட்டியந்தோட்டையில் பதிவாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .