2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'பாதாள உலகக் கோஷ்டியை இல்லாதொழிக்க நடவடிக்கை'

Thipaan   / 2016 மார்ச் 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய நாட்களில் இடம்பெற்ற படுகொலைகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டியை, நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'அண்மையில், பாதாள உலகக் கோஷ்டியினர் சில கொலைகளைச் செய்திருப்பதை நாம் கண்டோம். அரசாங்கம் என்ற வகையில், அவர்களை நாட்டிலிருந்து முற்றாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைளை நாம் மேற்கொள்வோம்' எனத் தெரிவித்தார்.

'இப்போது நாட்டில் காணப்படும் போதைப் பொருள் அச்சுறுத்தல் நாட்டிலுள்ள இளைஞர்களை  மோசமாகப் பாதிக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .